The Sick Lion


ஒரு காட்டில் ஒரு வயதான சிங்கம் வாழ்ந்து வந்தது, அது எந்த உழைப்பும் இல்லாமல் தனது உணவை பெற ஒரு யோசனை செய்தது. 

அந்த சிங்கம் தனக்கு நோய் உள்ளது என காட்டினுள் ஒரு பொயியான தகவலை பரப்பி, அதன் குகையில் நோயுற்றதை போல் படுத்தும் கொண்டது. 



அந்த காட்டில் வாழ்ந்த அனைத்து விலங்குகளும்  தங்கள் அரசன் நோயுற்று இருப்பதை அறிந்து அவரது நலம் விரும்பி  சந்திக்க முடிவு செய்தன. 



சிங்கத்தின் குகை வாயிலில், எல்லா விலங்குகளும் ஒன்றின் பின் ஒன்றாக அரசரை சந்திக்க முடிவு செய்தன.

அப்போது முதலில் ஒரு பசு குகைக்குள் சென்றது. மற்ற விலங்குகள் அனைத்தும் தங்கள் முறைக்காக வெளியில் காத்து நின்றன.


 


வெகு நேரமாகியும் பசு வெளியே வராத்தால், பன்றி உள்ளே சென்றது .

பின்னர் முயலும் பில்லியும் குகைக்குள் சென்றனர். 



இறுதில் குள்ளநரி மட்டும் காத்திருந்து விட்டு, உள்ளே நுழையத் தயங்கியது. சிங்க ராஜா  குள்ளநரியை, "ஏன் நரியாரே ? என்னைப் பார்க்க வரமாட்டீரா ? " என அழைத்தது.


அதற்கு குள்ளநரி, " அரசே, என் நண்பர்கள் இன்னும் வரவில்லை. அவர்கள் உங்கள் வயிற்றிற்குள் சென்றுவிட்டார்கள் என நினைக்கிறேன் " என்று சொல்லிவிட்டு நரி உடனே காட்டுக்குள் ஓடியது.


நீதி:

" மற்றவர் செய்யும் தவறிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள் ".





Comments