உணவு நூல்
அகமும் புறமும் சூழலோடு
ஊடாடுதல் உணவெனப்படும்.
உணவு என்பது பசிக்காக உட்கொள்ளப்படும் பொருள் வகை என்ற மேலோட்டமான புரிதலிலிருந்து வெளியேறினால், மெய்ப்பொருள் கிட்டும்.
இது உணவு நூல் ஆதலின், அம்மையப்பர் அருளிய உணவு எனும் கருத்தினை அப்படியே பதிவு செய்தல் என் கடமையாகிறது.
வடிவம் கொண்ட எல்லாப் பொருட்களும் தமது சுற்றத்தில் உள்ள பிற பொருட்களை உள்வாங்குகின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் அகம், புறம் எனும் இருநிலை உண்டு. அகம் என்பது, மறைவாக உள்ள பகுதி. புறம் என்பது வெளிப்படும் பகுதி.உடல்களின் உட்புறத்தினை
' அகம்' என்றும், வெளிப்பகுதியினைப் 'புறம்' என்றும் அழைக்கலாம். உடல்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு பொருளுக்கும் அகம், புறம் உண்டு.
ஒரு பொருள் தனது சூழலில் உள்ள பிற பொருட்களோடு இடையூறாது ஊடாட்டம் செய்கிறது. ஊடாட்டம் எனும் சொல், 'பரவிக் கலத்தல்' எனும் வகையில் பொருட்களும் தம் சுற்றத்தில் உள்ள பிற பொருட்களைப் பரவிக் கலக்கின்றன. இவ்வாறு ஊடாட்டம் செய்யாத பொருள் ஒன்று இல்லை .
பேரண்டமே அம்மையப்பர் கலவி தான் . அணு முதல் அண்டம் வரையிலான எல்லாப் பொருட்களும் அம்மையப்பர் வடிவங்களே. எல்லாப் பொருட்களும் கலவி கொள்கின்றன. அணுவாக இருப்பினும் தனக்குச் சுற்றத்தில் உள்ள பிற அணுக்களை ஈர்த்தலும் அவ்வணுக்களால் ஈர்க்கப்படுதலும் செய்யும். அவ்வாறான நிகழ்வுகளில் ஓர் அணு தனக்குள் உள்ளவற்றை பிறவற்றுக்கும் ஈர்த்துக் கொள்ளும். இதுவே உணவு எனும் கருத்தின் சாரம்.
வடிவம் கொண்ட ஒவ்வொரு பொருளும் தன் வடிவத்திற்கும் செயல்களுக்கும் பொருத்தமானவற்றை உள்ளிழுக்கின்றன. உள்ளிழுத்தல் என்பது அப்பொருட்களின் முயற்சியின்றி நிகழும் நிகழ்ச்சி என்று உணர்க. அதாவது, பாறையும் தன் சூழலில் உள்ளவற்றை உள்ளிழுக்கும். தனக்குள் இருப்பவற்றைப் புறந்தள்ளும். இச்செயலுக்காக அப்பாறை எவ்வித முயற்ச்சியும் செய்வதில்லை. மாறாக ஈர்த்தலும் ஈதலும் (உள்ளிழுத்தலும், புறந்தள்ளி
வழங்குதலும்) தானாக நிகழுபவை ஆகின்றன.
சிவம் எனும் மூலத்தின் பண்புகளே பரண்டத்தின் எல்லாத் துகள்களிலும் பெரும்பொருட்களிலும் பொதிந்துள்ளன.சிவமே யாவுமாகி செறிந்துள்ளது. சக்தியே அப்பண்புகளின் வடிவமாகிறது. சிவம் பண்பாக மறைந்திருக்க, சக்தி வடிவாகி விரிகிறது. சிவம் செறிவு, சக்தி விரிவு. அணு முதல் அண்டம் வரையிலான எல்லாப் பொருட்களுக்கும் பண்பாக உள்ளது சிவம். அதே அணு முதல் அண்டம் வரையிலான அனைத்தையும் வடிவாக விரிப்பது சக்தி.
சிவத்தின் பண்புகள் அளவிடற்கரியது. 'இதுதான் சிவம், இவைதான் சிவம்' என்று வரையறுக்கவும் விளக்கி விடவும் வாய்ப்பில்லை. சிவத்தின் பண்புகள் எண்ணிலாப் பரிமாணங்கள் கொண்டவை. ஆதலின் சிவத்தின் பண்புகளை மனித அறிவினாலும் சிந்தையினாலும் விளங்கிக் கொள்ளவியலாது.
சக்தியாகிய அன்னை, சிவப் பண்புகளுக்கு வடிவம் அளிக்கிறாள். அவ்வடிவங்க்களின் வழியாக சிவம் விரிவடைகிறது. ஒவ்வொரு வடிவமும் சிவத்தின் பண்புகளை விரிக்கும் செயலாகிறது. அணுவின் பண்புகள்
செறிவாக உள்ளன. காற்று எனும் வடிவம் அணுவின் பண்புகளை விரித்து வெளிப்படுத்துகிறது. அணுக்களின் சேர்க்கையில் உருவாகும் முதல் நிலை வடிவம் காற்று. அக்காற்றில் எண்ணிலா அணுக்கள் உள்ளன. அணு, அணுவாகவே இருக்கையில் அதன் பண்பு ஒடுங்கியுள்ளது. அதாவது அணுவினுள் சிவம் தன்னை ஒடுக்கிக் கொண்டுள்ளது. சக்தி, அணுக்களைதி திரட்டி காற்று
எனும் வடிவாக்கும் போது, அணுவினுள் ஒடுங்கிக் கிடந்த சிவம் விரிவடைகிறது.
உலவுதல், இணைதல், புணர்தல், வடிவம் அளித்தல் உள்ளிட்ட பண்புகள் காற்றில் உள்ளன. காற்று எப்போதும் உலவிக் கொண்டுள்ளது. காற்று, பிற பொருட்களை இணைத்து வைக்கிறது. காற்றில் உள்ள பிற பொருட்கள் அல்லது காற்று இணைக்கும் பொருட்கள் புணர்ச்சி செய்கின்றன. அதாவது, ஒன்றோடு மற்றொன்று கூடுகிறது. இது குறித்த விளக்கம் மூலநூலில் உள்ளது, காண்க.
அணு எனும் நிலையில் ஒடுக்கமாக இருக்கும் சிவம், காற்று எனும் வடிவில் இவ்வளவு பண்புகளாக விரிவடைகிறது.
இவ்வாறு விரிவடைதல் சக்தியினால் நிகழ்த்தப்படுவதாகும். காற்று எனும் வடிவம் வெப்பம் எனும் அடுத்த நிலைக்கு விரிவடையும்போது அதன் பண்புகள் மேலும் விரிகின்றன. இவ்வாறு சிவத்தின் செய்வினை விரித்தல் சக்தி எனும் அன்னையின் இயக்கம்.
அனு தன் புறப்பகுதியினாலும் அகத்தினாலும் சூழலில் உள்ள பிற அணுக்களை உள்ளிழுத்தல், 'உணவு' உட்கொள்ளுதல் ஆகும். அணு மட்டுமல்ல, ஒவ்வொரு பொருளும் தனது புறம், அகம் ஆகியவற்றினால் சூழலில் உள்ளவற்றை உள்ளிழுத்தல், உணவு உட்கொள்ளல் ஆகிறது. இதுவே பேரண்டத்தின் உணவு எனும் கருத்து.
உணவு எனும் கருத்து, ஈர்த்தலும் ஈதலும்' எனும் இரட்டை நிலைகொண்டது. சூழல் பொருட்களை
உள்ளிழுத்தல் ஈர்த்தல் என்றும், உள்ளிருப்பவற்றை வெளித் தள்ளல் ஈதல் என்றும் ஆகும். இவ்வாறு 'உணவு' பேரண்டம் முழுமையும் செயல்படுகிறது.
கலத்தல் உணவின் நோக்கம்.
புணர்தல் உணவின் செயல்முறை.
வேறு வேறு எனும் இரட்டை நிலையில் உள்ளவை, 'ஒன்று' எனும் கலவி நிலையை அடைதல்தான் 'உணவின்' நோக்கம். இந்த கலவிக்கான செயல்முறை, புணர்ச்சி ஆகும்.
புணர்ச்சி என்பது, முரண்களின் சேர்க்கை. நேர், எதிர் ஆகிய தன்மைள் கொண்டவை தமக்குள் கூடுதல் புணர்ச்சி ஆகிறது. இதில் நேரும் புணர்வதில்லை. எதிரும் எதிரும் புணர்வதில்லை.
நேர் தன்மை கொண்டவை யாவும் சிவம் ஆகும். எதிர் தன்மை கொண்டவை யாவும் சக்தி ஆகும். நேர்தன்மை, செறிவானதும் உச்சநிலை இயக்கம் கொண்டதும் ஆகும். செறிவானது என்பதை சற்று விளக்கிக் கூறல் பொருத்தமாக இருக்கும். அளவிலாப் பண்புகளைத் தனக்குள் உள்ளடக்கி, தானாக அசையாமல், தானாக வெளிப்படுத்தாமல் இருத்தல் செறிவு எனும் சொல்லால் இங்கு குறிக்கப்படுகிறது.
எதிர் தன்மை உடையவை யாவும், விரிவு நோக்கியாவையாகவும், இயக்கத்தைத் தணிப்பவையாகவும் இருக்கும். எதிர் தன்மை எப்போதும் தன்னை விரித்துக் கொள்ள முற்படும். அவ்வாறு விரிக்கும்போது தனியாக விரிவதில்லை. நேர் தன்மையாகிய சிவத்தையே விரிகிறது. ஏனெனில் நேரும் எதிரும் எங்கும் எப்போதும்
தனித்திருப்பதில்லை. எதிர் தன்மை விரிக்கையில் சிவத்தின் செறிவைத்தான் விரிக்கிறது. எதிர் தன்மையின் இயக்கம் நேர் தன்மையின் இயக்கத்திற்கு எதிராக அமைவது. சிவத்தின் இயக்கப் போக்கினைத் தணிப்பதே சக்தியின் இயக்கம். ஆதலால், சிவமும் சக்தியும் நேர் மற்றும் எதிர் எனும் நிலைகளில் புணர்ந்து கொண்டுள்ளன என்கிறோம்.
இப்புணர்ச்சியின்போது, சிவத்தின் செறிவு வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஒவ்வோர் அணுவிலும் அதன் உட்பொருள்களிலும் உள்ள சிவத்தின் செறிவினை வெளிப்படுத்துவது சக்தி என உணர்க. இவ்வாறு வெளிப்படுத்துவதற்காக சிவமும் சக்தியும் கூடுதல்தான் புணர்ச்சி எனப்படுகிறது. இப்புணர்ச்சியின் விளைவாக, ஒரு பொருளும் மற்ற பொருளும் கலவி கொள்கின்றன. அதாவது, அணுவும் அணுவும் கலக்கின்றன. இக்கலப்பின் விளைவாக, புதிய பண்புகள் கொண்ட அடுத்த நிலை அணுக்கள் பிறக்கின்றன.
அடுத்த நிலை அணுக்களில் முந்தைய அணுக்களின் பண்புகளும் இருக்கும். அவ்வணுக்களில் வெளிப்படாமல் மறைவாக இருந்த பண்புகளும் இருக்கும். சிவத்தின் செறிவான பண்புகளை ஒவ்வொரு வடிவ நிலையிலும் வெளிப்படுத்துவதே சக்தி ஆகிய அன்னையின் இயக்கம்.
கருந்துளைகள் பல அண்டங்களைத் தமக்குள் உள்ளிழுக்கின்றன. இச்செயலும் உணவு எனும் கொள்கையின் விளைவே ஆகும். பல்வேறு பண்புகளுடன் உள்ள அண்டங்களை கருந்துளை உள்ளிழுத்து, அவ்வண்டங்களைப் புணர்ந்து, அவற்றின் மறைவான பண்புகளை
வெளிப்படுத்துகின்றது. கருத்துளைக்குள் ஆட்பட்ட அண்டங்கள், வேறு பல பண்பு கொண்டவையாக வெளிப்படுகின்றன.
புவியில் தாவர வகை உயிரினங்கள் முதன்மையானவை.ஆகாயம், காற்று, வெப்பம், நீர், நிலம் ஆகிய ஐந்து பூதங்களின் பண்புகளும் தாவரங்களாலுள்ளிழுக்கப் படுகின்றன. இவ்வாறு உள்ளிழுத்து, தமது வடிவத்திற்கான பண்புகளாக வெளிப்படுத்துகின்றன. காற்று எனும் பூதத்தில் செறிவாக உள்ள பண்புகள், தாவரத்தின் உள்ளே சென்றுவிட்டு வெளியே வரும்போது, மாற்றமடைகிறன. தாவரத்தின் உள்செல்லும் முன் இருக்கும் காற்றுக்கும்,உள்ளிருந்து வெளியேறும் காற்றுக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உண்டு. மேலும், கற்றில் இருந்த பல்வேறு பண்புகளை தாவரம் தனது வடிவமாகிய உடலுக்குள் இருத்திக் கொள்கிறது.
ஆக, காற்று,
தாவரத்தில் நுழையும் முன்
தாவரத்தில் நுழைந்த பின்
தாவரத்தில் உள்
- ஆகிய மூன்று வகையான பண்பு நிலைகளை அடைகிறது. வெப்பத்திற்கும் நீருக்கும் இது பொருந்தும்.
தாவரம், நீரின் பண்புகளை உணவாக உள்ளிழுக்கிறது. அந்த நீர், வெளியே இருக்கும் வரை என்னென்ன பண்புகள் இருந்தனவோ அப்பண்புகளைக் காட்டிலும் கூடுதலானவை தாவரத்தின் உள்ளே வெளிப்படுகின்றன. நிலத்தில் இருக்கையில் நீர். தாவரத்தின் உள்ளிருக்கையில் சாறு. சில தாவரங்களில் இருக்கும் நீர், பால் எனப்படுகிறது. சில தாவரங்களில் பிசின் ஆகிறது.இதே நீர் தாவரங்களில் இருந்து வெளியேறுகையில் நீர் ஆவி எனும் நிலையை அடைகிறது. நீருக்குள் இந்த எல்லாப் பண்புகளும் உள்ளன. தாவரம் எனும் வடிவம் அந்தப் பண்புகளை விரிவடையச் செய்கிறது.
ஓர் அணில் மரத்தில் வாழ்கிறது. அம்மரத்தில் உள்ள பழங்களை, கொட்டைகளிலும் உள்ள பண்புகளுக்கும்,அணில் எனும் உடலுக்குள் சென்ற பின்னர் அந்த உடலில் வெளிப்படும் பண்புகளுக்கும் ஏராளமான மாற்றங்கள் உண்டு. அணில் உடல் எனும் வடிவம், தனக்குள் வந்த தாவர உணவின் செறிவினை விரிவு செய்கிறது. இதே அணிலை ஒரு பருந்து உணவாக்குகிறது. அணில் உடலில் இருந்த பண்புகளைக் காட்டிலும் கூடுதல் பண்புகள் பருந்தின் உடலில் வெளிப்படுகின்றன. வடிவத்திற்கு ஏற்ப, சிவத்தின் பண்புகள் விரிக்கப்படுகின்றன.
இவ்வாறு ஒரி வடிவம் பற்றொரு வடிவத்தை உணாவாக்கும்போது, அவ்வாடிவங்களுக்கிடையிலான பண்புகளின் சேர்க்கை 'புணர்ச்சி' எனப்படுகிறது. இப்புணார்ச்சியின் விளைவாக, அடுத்த நிலைப் பண்புகளை விரிக்கும் வடிவங்க்கள் உருவாகின்றன. இவ்வாறு சிவமும் சக்தியும் புணர்ச்சியில் ஈடுபட்டு, கலந்து கொண்டே இருத்தல் 'கலவி' எனப்படுகிறது.
இக்கலவிதான் பேரண்டம் முழுமையும் நீக்கமற, இடையறாது நிகழ்வதாகிறது.
வடிவங்களுக்குப் பொருத்தமான உள்ளிழுப்பு உணவு ஆகும். பொருந்தாதவை உணாவு ஆவதில்லை. எல்லாம் சிவம்தான். எல்லாம் சக்திதான். ஆயினும், வடிவங்கள் வேண்டும்.என்றால் வடிவங்களுக்கான பொருத்தமும் விளக்கமும் இருக்க வேண்டும்.நீரும் சிவசக்தி, நெருப்பும் சிவசக்தி. நீர் நீராக இருக்க வேண்டுமெனில், நீரும் நெருப்பும் புணராதிருக்க வேண்டும். அவ்வாறு புணர்ந்தால், நீரும் அழிவதில்லை, நெருப்பும் அழிவதில்லை. நீரும் நெருப்பும் புணர்கையில், நெருப்பு மிகுந்தால் நீர் ஆவியாகிறது. அந்த ஆவியின் உள்ளே நீரின் குளிர்ச்சி எனும் பண்பு இருக்கிறது. ஆனால், அப்பண்பு நீர் எனும் வடிவத்தில் இல்லாமல் காற்று எனும் வடிவத்தில் உள்ளது. நீரும் நெருப்பும் புணர்கையில் நீர் மிகுந்தால், நெருப்பு அழிவதில்லை. நெருப்பின் பண்பாகிய வெப்பம், நீரில் கலந்துவிடுகிறது. அது வெந்நீர் ஆகிறது. பின்னர் அந்த வெந்நீரும் வெப்பம் தணிந்து, தனக்குள் இருந்த வெப்பத்தை காற்றில் கலக்க வைக்கிறது. ஆக, எதுவும் அழிவதில்லை. ஒன்று வேறொன்றாக மாற்றம் அடைகிறது.
'ஒரு வடிவம் அதன் இயற்கையான அடித்த வடிவத்தை அடைவதற்கு, அவ்வடிவத்திற்குப் பொருத்தமான உணவு தேவை.' இதுவே உணவு கொள்கையின் மூலமான கருத்து.
இயற்கைப் போக்கில் ஒரு வடிவம் இன்னொரு வடிவத்தை உணவாகக் கொண்டு, அடுத்த நிலை வடிவத்தை அடைகின்றது.
மழை நீரில் சிவத்தின் பண்புகள் செறிந்துள்ளன. மழை நீர் உயிர்ச் செறிவு மிக்கதாக உள்ளது. அம்மழை நீர், நிலத்தில் விழுகையில் நிலம் எனும் வடிவத்துடன்
புணர்கிறது. இப்புணர்ச்சியின் விளைவாக, நுண்ணுயிரினங்கள் பிறக்கின்றன. இவ்வுயிரினங்கள் நிலத்திலும் இருக்கவில்லை, நீரிலும் இருக்கவில்லை. இரண்டிலும் மறைவாகவும் செறிவாகவும் பண்பு எனும் நிலையில் இருந்தவை. நீரும் நிலமும் புணரும்போது, அப்பண்பு நுண்ணுயிரிகள் எனும் வடிவங்களாக விரிகின்றது. இந்த நுண்ணுயிரிகள் தமக்குள் புணர்ந்து, பல்கிப் பெருகி, சூழலில் உள்ள பல்வேறு பொருட்களை உணவாக்குகின்றன. மண்ணில் உள்ள உயிர்க் கரிமம், காற்றில் உள்ள கரிமம், வேறு பல நுண் ஊட்டங்கள் ஆகியன அவற்றுக்கு உணவாகின்றன. இதன் விளைவாக, அடுத்த நிலை உயிரிகளான பலசெல் உயிரினங்கள் பிறக்கின்றன. இவ்வுயிரினங்களும் உணவு உட்கொண்டு, அடுத்த நிலை உயிரினங்களை விளைவிக்கின்றன. இந்தச் செயல்கள் யாவும் மிகமிக நுட்பமான கால அளவில் நிகழ்கின்றன.
ஒரு மலை பொழிந்த சில மணித்துளிகளில் புற்கள் முளைவிடுகின்றன. ஆனால், இப்புற்கள் முளைப்பதற்கு ஏதுவான உணவு வகைகள் ஏராளம் என்பதை நினைவில் கொள்க. அவ்வளவு உணவு வகைகளும் நிலத்தில் உருவாகி அடுத்த நிலை அடைந்து, புல் எனும் தாவரத்தின் வேர்களுக்கும் விதைகளுக்கும் உணவாகி அவற்றை முளைக்கச் செய்கின்றன. மழையில் புல் விதை இல்லை. ஆனால், மழைக்குப் பின் புல் முளைக்கிறது. மழையில் சிவம் குளிர்ச்சியாக இருக்கிறது. அதே சிவம் நிலத்தில் புல்லின் வளர்ச்சியாக விரிகிறது என்பதே மெய்ப்பொருள். இவ்வாறு பண்புகளை விரிவடையச் செய்யும் சக்தி ஆகிய அன்னை, வடிவங்களின்
இயற்கையாகத் திகழ்கிறாள்.
பொருத்தமான உணவு எனும் கருத்து இங்குதான் நிலைநாட்டப்படுகிறது இயற்கை வடிவங்களின் அடுத்த நிலையை எட்ட வேண்டுமானால், பொருத்தமான உணவு தேவை. இயற்கைப் போக்குகள் பொருத்தமான உணவை மட்டுமே உட்கொள்ளதக்கவை.
'எந்த உணவு ஒரு வடிவத்தை அதன் இயற்கையான அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லுமோ அதுதான் பொருத்தமான உணவு' என்பதால் இயற்கையின் உணவுப் பழக்கம் தெளிவானதாக உள்ளது.
உயிரினங்களின் உடல் மீது படும் காற்று, வெப்பம், நீர் ஆகியனவும் உணவு வகைகளே. அவ்வுடல்கள் இந்த ஆற்றல்களை எல்லாம் தமக்குப் பொருத்தமான வகைகளில் உள்ளிழுகின்றன. தாவரம் தன் மீது விழும் வெயிலைத் தனக்கான வடிவத்தின் பண்பாக விரிக்கிறது அதே தாவரத்தில் அமர்ந்திருக்கும் வெட்டுக்கிளி அதே வெயிலை, தன் வடிவத்தின் பண்பாக விரிக்கிறது. இதுவே உணவுக் கொள்கையின் செயல்முறைக் கருத்து.
உணவு எனப்படுவது வாய்வழியாக உட்கொள்ளப்படுவது, சுவை மிகுந்தது, சத்துகள் நிறைந்தது என்பன போன்ற புரிதல்கள் மெய்மையை உணராதோர் முன்வைப்பவை.
சிந்தனையிலும் உணவு உண்டு. ஒரு வடிவம் தன்னை மாற்றத்திற்குள்ளாகும் போது தனக்குப் பொருத்தமான சிந்தனைகளை உட்கொள்ளும். அவ்வாறு உள்ளே வரும் சிந்தனையின் பண்புதான் சிவம். சிவத்தின் எண்ணற்ற பண்புகளில் தனக்குப் பொருத்தமானவற்றை விரித்து
-ம.செந்தமிழன்
Comments
Post a Comment