குழந்தை பாடல்

 

மயிலே, மயிலே ஆடிவா

மக்காச் சோளம் தருகிறேன் !

குயிலே, குயிலே பாடிவா

கோவைப் பழங்கள் தருகிறேன் !

பச்சைக் கிளியே பறந்துவா 

பழுத்த கொய்யா தருகிறேன் ! 

சிட்டுக் குருவி நடந்துவா

சட்டை போட்டு விடுகிறேன் !

ஓடைக் கொக்கு இங்கே வா

ஓடி பிடித்து ஆடலாம் !

மாடப் புறாவே இறங்கிவா 

மடியில் குந்திப் பேசலாம் !


Comments