Skip to main content
தாலாட்டு பாடல்
ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலையும்
காசி பதம் பெற்றவனே !
கண்ணே நீ கண்ணுறங்கு !
கண்மணியே நீ உறங்கு !
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே,
பாலகனே நீ உறங்கு !
நான்னாட்ட நீ தூங்கு !
நாகமரம் தேரோட !
தேரு திரும்பி வர !
தேவ ரெல்லாம் கை யெடுக்க !
வண்டி திரும்பி வர !
வந்த பெண்கள் பந்தாட !
வாழப் பழ மேனி !
வைகாசி மாங்கனியே !
கொய்யாப் பழ மேனி ! - நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே !
வாசலிலே வன்னிமரம் !
வம்மிசமாம் செட்டி கொலம் !
செட்டி கொலம் பெத்தெடுத்த !
சீராளா நீ தூங்கு !
சித்திரப் பூ தொட்டிலிலே !
சீராளா நீ தூங்கு !
கொறத்தி கொறமாட !
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல !
வேதஞ் சொல்லி வெளியே வர !
வெயிலேறி போகுதையா !
மாசி பொறக்கு மடா !
மாமன் குடி யீடேற !
தையி பொறக்கு மடா - உங்க !
தகப்பன் குடி யீடேற !
ஆராரோ ஆரிராரோ
கண்ணே நீ கண்ணுறங்கு !
Comments
Post a Comment