தாலாட்டு பாடல்



ஆனை விற்கும் வர்த்தகராம் - உன் மாமன்

 சேனைக் கெல்லாம் அதிகாரியாம் 

சின்னண்ணன் வந்தானோ கண்ணே - உனக்கு 

சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு 

பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப் 

பல வர்ணச் சட்டைகளும் 

பட்டுப் புடவைகளும் கண்ணே - உனக்கு 

கட்டிக் கிடக் கொடுத்தானோ !

பொன்னால் எழுத்தாணியும் - கண்ணே உனக்கு 

மின்னோலைப் புத்தகமும் 

கண்ணாரே ! பின்னா ரேன்னு -  கண்ணே 

கவிகளையும் கொடுத்தானோ !



 

Comments