Skip to main content
குழந்தை பாடல்
தாத்தா வைத்த தென்னையுமே,
தலையால் இளநீர் தருகிறது !
பாட்டி வைத்த கொய்யாவும்,
பழங்கள் நிறைய கொடுக்கிறது !
அப்பா வைத்த மாஞ்செடியும்,
அல்வா போல பழம் தருது !
அம்மா வைத்த முறையுமே
அளவில்லாமல் காய்கிறது !
அண்ணன் வைத்த மாதுளையும்,
கிண்ணம் போல பழுக்கிறது !
சின்னஞ்சிறுவன் நானுமொரு
செடியை நட்டு வளர்த்பேனே...
Comments
Post a Comment