தாலாட்டு பாடல்

 



ஆயர்பாடி மாளிகையில்

தாய்மடியில் கன்றினைப் போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான்

தாலேலோ ..... 

அவன் வாய்நிறைய மண்ணை உண்டு

மண்டலத்தைக் காட்டியபின்

ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ...

ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ...

 (ஆயர்பாடி மாளிகையில் )

பின்னலிட்ட கோபியரின்

கன்னத்திலே கன்னமிட்டு

மன்னவன் போல் 

லீலை செய்தான் 

தாலேலோ ...

அந்த மந்திரத்தில் அவர் உறங்க

மயக்கத்திலே இவனுறங்க 

மண்டலமே உறங்குதம்மா ஆராரோ ...

மண்டலமே உறங்குதம்மா ஆராரோ ... 

(ஆயர்பாடி மாளிகையில் )

நாகப்படம் மீதில் அவன்

நர்த்தனங்கள் ஆடியதில் 

தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான்

தாலேலோ ...

அவன் மோக நிலை கூட

ஒரு யோக நிலை போலிருக்கும்

யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ ...

யார் அவனைத் தூங்க விட்டார் ஆராரோ ...

(ஆயர்பாடி மாளிகையில் )

கண்ணனவன் தூங்கிவிட்டால்

காசினியே தூங்கிவிடும்

அன்னையரே துயிலெழுப்ப

வாரீரோ...

அவன் பொன்னழகைப் பார்ப்பதற்கும் 

போதை முத்தம் பெறுவதற்க்கும்

கன்னியரே கோபியரே வாரீரோ ...

கன்னியரே கோபியரே வாரீரோ ...

(ஆயர்பாடி மாளிகையில் )


Comments