தாலாட்டு பாடல்
ஆராரோ ஆரிரரோ
ஆரிரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
கண்ணே யடுச்சார் ஆரு
கற்பகத்தை தொட்டார் ஆரு
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
மாமன் அடித்தானோ
மல்லி பூ சென்டாலே
அண்ணன் அடித்தானோ
ஆவாரமங் கொம்பாலே
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே
ஆராரோ ஆரிரரோ
ஆரிரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு...
Comments
Post a Comment