குழந்தை பாடல்

 

யானை பெரிய யானை 

யார்க்கும் அஞ்சா யானை 

பானை வயிற்று யானை 

பல்லைக் காட்டா யானை 

முறத்தைப் போல காது 

முன்னால் வீசும் யானை 

சிறிய கோலி  குண்டாம் 

சின்ன கண்கள் யானை 

முன்னங்காலை மடக்கி 

முட்டி போட்டு படுக்கும் 

சின்ன குழந்தை ஏற்றி 

சிங்காரமாய் நடக்கும்.

Comments